/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/376_13.jpg)
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து படத்தை வரவேற்க ராம் சரண் ரசிகர்கள் தயாராகி வருகின்ரனர். அந்த வகையில் ஆந்திரா விஜயவாடாவில் உள்ள ராம் சரணுக்கு 256அடி உயரமுள்ள கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் அதிக அடி உயரமுள்ள கட்-அவுட் வைத்த பட்டியலில் ராம் சரண் முதல் இடத்தில் இருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)