''தமிழ்ப்படம் வந்ததால் இப்படத்தைக் கைவிட்டேன்..!'' - 'லொள்ளுசபா' ராம் பாலா

கரோனா பீதியால் பிறப்பிக்கப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியைப் படமாக்கும் முயற்சி குறித்து இயக்குனர் ராம்பாலா தற்போது விளக்கமளித்துள்ளார். அதில்...

vdg

'லொள்ளு சபா' நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தபோது அதை முழு நீளத் திரைப்படமாக மாற்றும் யோசனையை வைத்திருந்தேன். அதற்காக ஒரு பழைய தமிழ்ப் படத்திலிருந்து கருவை மாற்றி திரைக்கதை அமைத்திருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் வெளியான மிர்ச்சி சிவாவின் தமிழ்ப் படத்தின் அடிப்படை யோசனை 'லொள்ளு சபா' நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டதால் என் ஸ்பூஃப் பட முயற்சியை அப்படியே கைவிட்டு விட்டேன்'' என விளக்கமளித்துள்ளார்.

Santhanam lollusabha ram bala lollu sabha
இதையும் படியுங்கள்
Subscribe