Advertisment

ராணாவுடனான தன் காதல் குறித்து அறிவித்த ரகுல் பிரீத் சிங் 

rakul

நடிகர், நடிகைகளின் பிறந்த நாட்களும், படத்தின் வெற்றிவிழாவும், தெலுங்கு பட உலகில் பெரும்பாலும் மது விருந்து நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது. இதில் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் என்று திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மது அருந்துகிறார்கள். இப்படியான மது விருந்தை பற்றியும், ராணா உடனான காதல் பற்றியும் ரகுல்பிரீத் சிங் பேசுகையில்...."எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. என்னை சுற்றி இருப்பவர்கள் மது குடித்து சந்தோஷமாக இருந்தாலும் நான் அதை தொடுவது இல்லை. எனக்கும் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நான் எங்கு சென்றாலும், ராணாவுடன் உங்களுக்கு காதலாமே என்று தான் கேட்கிறார்கள். எப்போது கேட்டாலும் என்னிடமிருந்து ஒரே பதில்தான் வரும். எனக்கும் ராணாவுக்கும் காதல் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எனது நட்பு வட்டாரத்தில் இருபது பேர் இருக்கிறார்கள். அதில் ராணாவும் உள்ளார். நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் டெல்லியில் இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர்கள் எல்லோருடனும் நட்புடன்தான் பழகுகிறேன்" என்றார்.

Advertisment
rakul rakulpreet rana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe