Rakul Preet Singh

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். தற்போது நலமாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுக்க உள்ளேன். அதன்மூலம், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும். என்னைச் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment