Skip to main content

நிவாரண நிதி திரட்ட யூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 210 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. இதனிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

 

jfjfg

 

ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த லாக்டவுனால் அடிப்படைத் தேவைகள் இன்றி கஷ்டப்படும் 200 ஏழை குடும்பங்களுக்குச் சமீபத்தில் தினசரி உணவு வழங்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான முறையில் கரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்து, அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இது ரொம்ப வருத்தமானது!!" -நடிகை ரகுல் ப்ரீத் சிங் வேதனை!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020
nfdhfdhb

 

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"இது ரொம்ப வருத்தமானது!! அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஜெய பிரகாஷ் ரெட்டி காரு" என கூறியுள்ளார்.

 

 

Next Story

''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

dgds


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பன்னாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 
 


இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகைகள் ஹன்சிகா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ள விமானம் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில்...

''சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வீடு திரும்புவதற்கு சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம் அடுத்த வாரம் சிங்கப்பூரிலிருந்து ஹைதராபாத் செல்ல தனியார் பட்டய விமானம் திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள், உங்கள் குடும்பத்தினர் என யாரவது இந்த விமானத்தில் பயணிக்க விரும்பினால், தயவுசெய்து உங்கள் முழுப் பெயர் மற்றும் மொபைல் எண்ணை இப்போதே, singhydplane@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்'' எனப் பதிவிட்டுள்ளனர்.