Advertisment

"வெள்ளை நிற உடை அணிந்த அனைத்து ஹீரோக்களுக்கும் நன்றி" - ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து!

vdgdsgdsvs

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்திய அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. தற்போதைய சூழலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் உணவு, தூக்கமின்றி போராடிவருகின்றனர். இதற்கிடையே ஜூலை 1ஆம் தேதியான இன்று தேசிய டாக்டர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

இந்த டாக்டர் தினத்தை முன்னிட்டு பல்வேறு திரைபிரபலங்கள் கரோனாவிற்கு எதிராகப் போராடிவரும் பல்வேறு டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் டாக்டர்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் வெள்ளை நிற உடையணிந்த அனைத்து ஹீரோக்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் மீது காட்டும் இரக்கத்திற்காக நாங்கள் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe