Advertisment

ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு பலத்த காயம்

Rakul Preet Singh injury

Advertisment

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 3 படத்தையும் இந்தியில் ஒரு படத்தையும் கைவசம் வைத்துள்ளார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார்.

நடிப்பதை தாண்டி தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அவ்வப்போது ஜிம்மில் ஒர்க் கவுட் செய்யும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி ஜிம்மில் 80 கிலோ எடைகொண்ட பளு தூக்குதலைத் தூக்கி உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடல்நலம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைச் செய்து விட்டேன். என் உடல் சொல்வதை கேட்கவில்லை. ஆரம்பத்தில் சின்னதாக வலி இருந்தது. ஆனால் நாளடைவில் அது பெரிய காயமாக மாறிவிட்டது. கடந்த ஆறு நாட்களாக நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். முழுவதுமாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என நினைக்கிறேன். அதனால் நீங்கள் உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். அதை கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுங்கள். அதை மீறி எதையும் செய்யாதிர்கள். நான் மீண்டும் வலிமையுடன் வருவேன்” என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe