சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

rakul preet singh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கரோனா வைரஸ் பரவல் குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “தயவுசெய்து மிகவும் அவசியமான தேவைகளுக்காக அல்லாமல் வெளியில் வரவேண்டாம். இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்யமுடியவில்லை. ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். கவனக்குறைவாக இருக்கவேண்டாம். நேர்மறையாகச் சிந்தியுங்கள். புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment