Advertisment

'அவரைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை' - ரகுல் ப்ரீத் சிங்

rakul

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'தேவ்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ, கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். கார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' - ல் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.

rakulpreet karthi dev
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe