பாலிவுட்டின் முன்னணி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இவர் புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகையில், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்து உள்ளது. இந்த பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அவர் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறார். அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். நான் நாட்டிற்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.பாகிஸ்தான் எல்லைக்குள் 50 அல்லது 100 வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று பயங்கரவாதிகள் மீது வீசி அவர்களை அழிக்கவும் தயாராக இருக்கிறேன். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.