தன்னுடைய ரசிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாக நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய ரசிகர்கள் என்னுடன் சாட் செய்வார்கள். நான் ஒருமுறை மிகுந்த கவலையில் இருந்தபோது என்னுடைய கணவர் ரித்தேஷ் ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று வாட்சாப் மெஸேஜ் செய்து கேட்டார். நான் அதை பார்த்து அதிர்ந்துவிட்டேன். நான் சோகத்தில் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என அவரிடம் கேட்டேன். நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் ரசிகன் என்று பதில் அளித்தார். அப்போதே அவர் மீது காதல் கொண்டேன். அவரை ஒருநாள் திருமணம் செய்வேன் என அப்போதே எனக்கு தெரியும்.

பின்னர் அவர் மீது அதீத காதல் வயப்பட்டு, இயேசுவிடம் நிறைய வேண்டி கொண்டேன். எங்களுக்குள் மத வேறுபாடு இருந்தது. நான் கிறிஸ்டியன் அவர் இந்து. ஆனால் அதெல்லாம் அவருடன் பழகியபோது தெரிவில்லை. ரித்தேஷ் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார். நான் திருமணம் செய்துகொண்டால் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என அஞ்சித்தான் திருமணம் செய்துகொண்ட தகவலை யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வந்தேன் என்று கூறியுள்ளார்.