Advertisment

ஆர்யன் கைதால் ஷாருக்கான் தோற்றத்தில் இருக்கும் நபருக்கு ஏற்பட்ட சோகம்!

shahrukh khan look alike

பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையிலிருந்து கோவா சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கப்பலில் அதிரடி சோதனை நடத்தினர். அந்தக் கப்பலில் இருந்த நடிகர் ஷாருக்கானின் மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அவர் கைதும் செய்யப்பட்டார். தற்போது மும்பையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அவரை பிணையில் வெளியே கொண்டுவர ஷாருக்கான் தரப்பு பல்வேறு முயற்சிகள் எடுத்துவரும் நிலையில் ஆர்யனின் இந்தக் கைது, ஷாருக்கானை ஒத்த தோற்றத்தில் இருக்கும் ராஜு ரஹிக்வார் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானை ஒத்த தோற்றத்தில் இருப்பதால் ராஜு ரஹிக்வார். பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். அதன் மூலம், கணிசமான வருவாயும் அவர் ஈட்டிவந்துள்ளார். தற்போது ஆர்யன் கைது விவகாரத்தினால் ஷாருக்கானின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ராஜு ரஹிக்வார் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகளை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்துவிட்டனர்.

Advertisment

இது தொடர்பாக வட இந்திய ஊடகங்களில் பேசிய ராஜு ரஹிக்வார், கடந்த பல மாதங்களாக கரோனா பாதிப்பால் எந்த நிகழ்ச்சி வாய்ப்பும் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது இயல்புநிலை திரும்பிவரும் நேரத்தில், ஆர்யன் கானின் கைது விவகாரத்தால் தான் பங்கேற்க இருந்த இரு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் தனக்கு ஷாருக்கான் மீது எந்தக் கோபமும் இல்லையென்றும், தனக்கு கிடைத்த இந்த அடையாளம் ஷாருக்கானால்தான் கிடைத்தது என்பதால் அவர்தான் தனக்கு கடவுள் என்றும் தெரிவித்தார்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe