raju murugan speech at good day movie event

Advertisment

அறிமுக இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குட் டே’. இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் ராஜூ முருகனும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை க்ளோரிஃபை செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன.

போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது, படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான்” என்றார்.