Published on 08/03/2019 | Edited on 08/03/2019

அதர்வா, ஆர்.ஜே. பாலாஜி, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகிய நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ள படம் பூமராங். இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். ரதன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி, மக்களிடம் நல்ல பெயரை பெற்று வருகிறது. இப்படத்தில் நதி நீர் இணைப்பை பற்றி பேசியிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி நதிநீர் இணைப்பை பற்றி பேசியிருக்கிறார்கள் என்று பாராட்டியிருக்கிறார்.
கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தற்போது இருக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை பேசுதுதான் இந்த படத்தின் கதை.
திரையுலகை சேர்ந்த பலரும் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.