நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். அத்துடன் அவர் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் நிறைவாகிறது. கமல்ஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் நடித்தார்.

Advertisment

kamal 60

அவரது பிறந்தநாளானா நாளை, கமலின் தந்தை டி.சீனிவாசனின் நினைவு நாளும் கூட, இதனால் அவருடைய சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தையின் உருவ சிலையை கமல் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திறந்து வைக்கிறார். அடுத்த நாளான 8 ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

நவம்பர் 9ஆம் தேதி கமலின் 60 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தன. ஆனால், வானிலை காரணமாக இந்த நிகழ்ச்சி வருகிற 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 17 அன்று சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், கமல், விக்ரம், சூர்யா என பலர் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று சமூக வலைதளத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் புகைப்படங்களை வைத்து செய்யப்பட்ட அழைப்பிதழ் வைரலானது குறிப்பிடத்தக்கது. பொது விழாக்களில் கலந்துகொள்ளாத அஜித், கமலின் 60 வருட திரைப்பயணத்தை பாராட்ட கலந்துகொள்வார் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குஷியாக பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் அஜித் வரமாட்டார், கமலுக்கு நேரடியாக கால் செய்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிடுவார் என்று கூறுகின்றனர்.

Advertisment