உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபராக பதவிவகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

Advertisment

rajnikanth

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவிலுள்ளபந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து இதற்கான ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடியை அடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

Advertisment