பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு பின் மீண்டும் அனிருத்தே இசையமைக்கிறார். பல படங்களில் தவிற்க முடியாதவராக மாறியிருக்கும் யோகி பாபு இந்த படத்திலும் ரஜினியுடன் நடிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.

Advertisment

darbar

இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படபிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மும்பை மழையில் கூட ஷூட்டிங் நிற்காமல் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கான ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மும்பையிலிருந்து சென்னைக்கு திரும்பினார் ரஜினி.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தர்பார் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment