பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

Advertisment

yograj

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது ஷூட்டிங்கிலிருந்து லீக்கான வீடியோ மூல தெரிகிறது.

விரைவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், ரஜினியின் அறிமுக காட்சியில் யோக்ராஜ் சிங் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைகாட்சி அவருக்கு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

Advertisment

யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.