Advertisment

நடிகரின் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து!

kamal rajni

Advertisment

பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் நான்காம் தேதி வெளியிடப்பட்டது. பலர் எழுதிய இந்த தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

Advertisment

இந்நிலையில் ஜெய் ஜெயந்தை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு இரு நட்சட்த்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். லாக்டவுன் இல்லாமல் இருந்திருந்தால் வீட்டிற்கு வந்து வாழ்த்திருப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியதாக சொல்லப்படுகிறது.

actor kamal hassan rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe