கலாநிதி மாறன், ரஜினி அமைக்கும் புதிய கூட்டணி...

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு பின் மீண்டும் அனிருத்தே இசையமைக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.

rajnikanth

இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படபிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மும்பை மழையில் கூட ஷூட்டிங் நிற்காமல் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a1cc8946-d889-4e50-951f-e660ba219dea" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_70.jpg" />

அண்மையில் நடிகர் ரஜினிக்கான ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. சென்னைக்கு திரும்பிய ரஜினி விமான நிலையத்தில், “தர்பார் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு வந்த அடுத்த நாளே இயக்குனர் சிவாவை தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். பிறந்தநாளுக்கு முன்பே படத்தின் இந்த படத்தை தொடங்கிவிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

alt="puppy" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a460262d-2089-489a-8cab-30c7c5c2fe7e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_66.jpg" />

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் 168வது படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சிவாதான் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினியின் எந்திரன், பேட்ட போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தையும் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalanidhimaran rajnikanth siva
இதையும் படியுங்கள்
Subscribe