Advertisment

“இதுதான் நிஜமான சாகசம்”- குஷியான ரஜினிகாந்த் 

டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் VS வைல்ட்' என்ற நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலமானவர் பியர் க்ரில்ஸ். இவருடன் இணைந்து ஹாலிவுட் நடிகைகள் கேத்தே வின்ஸ்லெட், ஜூலியா ராபர்ட்ஸ், லீனா ஹெட்டே என பல பிரபலங்கள் காட்டுக்குள் பயணம் செய்திருந்தாலும் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து காட்டுக்குள் சென்றுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Advertisment

rajnikanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

‘இன் டூ தி வைல்ட்’ என்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் பிரபலமாக ரஜினிகாந்த் இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக கந்த மாதம் கர்நாடகா பந்திப்பூர் வனப்பகுதிக்குள் பியர் க்ரில்ஸுடன் இணைந்து ஷூட் செய்துவிட்டு, பின்னர் முள்குத்தியதால் அதிக நேரம் ஷூட்டில் கலந்துக்கொள்ளாமல் திரும்பினார் ரஜினிகாந்த்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி எப்போது ரிலீஸாக போகிறது என்று பலரும் எதிர்பார்ப்பில் இருக்கும்போது வருகிற மார்ச் 28ஆம் தேதி ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்போவதாக டிஸ்கவரி சேனல் புரோமோ வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் காட்டில் குவாட் வகை பைக்கை ஸ்டைலாக ஓட்டிவந்தார்.

இந்நிலையில் மேலு புதிதாக ஒரு வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி பாலத்தை கடப்பது, நெஞ்சளவு ஓடும் தண்ணீரில் நடப்பது என்று பல சாகசங்கள் புரிந்திருக்கிறார். புரோமோவில், இதுதான் உண்மையான சாகசம் என்று ரஜினி குஷியாக சொல்கிறார்.

bear grylls rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe