உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதில் அதிக அளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 3.3 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,616 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

rajni amitab

அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள் அமிதாப் பச்சன்,ரஜினிகாந்த்,சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர்.இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு 'ஃபேமிலி' எனப்பெயரிடப்பட்டுள்ளது.ப்ரசூன் பாண்டே என்பவர் இந்தக் குறும்படத்தை இயக்கவுள்ளார். இன்று இரவு ஒன்பது மணிக்கு தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது.