Advertisment

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரிடம் பிடித்த பண்புகள் விவேக் ட்வீட்!

பிரபலங்களை ஈஸியாகவும், நேரடியாகவும் தொடர்புக்கொள்வது என்பது மிகவும் எளிதானது ட்விட்டரில்தான். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது ட்விட்டர்.

Advertisment

vivek

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நடிகர் விவேக்கும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். சுமார் 36 லட்சம் பேர் நடிகர் விவேக்கை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள்.

Advertisment

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தாராளப் பிரபு என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் விவேக். விக்கி டோனார் என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த். 2.ignore negativity- திரு. விஜய். 3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்” என்று ரஜினி, விஜய், அஜீத் குறித்து தெரிவித்துள்ளார்.

vivek
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe