Advertisment

ஹெலிகாப்டரில் மலர் தூவ வேண்டும்- மனு அளித்த ரஜினி ரசிகர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும், நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் செட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

Advertisment

helicopter

எப்போதும் ரஜினியின் படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களின் தியேட்டர் கொண்டாட்டம் வேறு லெவலாக இருக்கும். அந்த வகையில் தர்பார் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் ரஜினியின் கட்டவுட்டிற்கு பூ தூவ திட்டமிட்டிருக்கிறார் சேலத்தை சேர்ந்த கனகராஜ்.

சேலம் மாவட்டத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டரில் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் 9ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் கட்டவுட்டில் மலர் தூவ வேண்டும் என்று சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மனுதாரர் கனகராஜ் ஹெலிகாப்டரில் மலர் தூவ கேட்டுள்ள இடத்தை பார்வையிட்டு விரிவான அறிக்கை அனுப்பு மாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Advertisment

வட்டாட்சியர் அனுமதி வழங்கலாம் என்று கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பினால் ஹெலிகாப்டரின் மூலம் மலர் தூவ அனுமதி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

darbar rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe