மம்முட்டி, ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் புதிய படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது. 'குபேரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மீனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார் ராஜ்கிரண்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_92.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும் என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். கலாபவன் ஷாஜன், ஜான் விஜய் வில்லன்களாக நடிக்க, அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரி முத்து, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அஜய் வாசுதேவ் இயக்கியுள்ள இப்படத்தின் மலையாள பதிப்பிற்கு 'ஷைலாக்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)