Advertisment

"விளைவு மிக மோசமாயிருக்கும்" - எச்சரித்த ராஜ்கிரண்

rajkiran viral post

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகத்தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சூழலில் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப்போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று., அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" எனப் பேசியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

மேலும், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, "அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதற்காக சீமான், மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதனிடையே நடிகர் ராஜ்கிரண் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோஅல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம்என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor Rajkiran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe