atharva

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகரான அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'தள்ளிப்போகாதே', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்கள் ரிலீசுக்குதயாராகவுள்ளன. இப்படங்கள் தவிர்த்து அவர் கைவசம் 'ஒத்தைக்கு ஒத்த', 'அட்ரஸ்' ஆகிய படங்கள் உள்ளன. மேலும், இயக்குநர்கள் பாலா, மிஷ்கின் ஆகியோர் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படங்களிலும் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நடிகர் அதர்வா ராஜ்கிரணின் பேரனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment