Rajini's song in 'Marvel Universe'

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் மற்றும் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் 'மார்வெல் காமிக்ஸ்'-ல் வரும் கதாபாத்திரங்களை வைத்து மிக பெரிய பொருட்செலவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்-கள் தயாரித்து வருகின்றது. இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' திரைப்படம் மற்றும் 'மூன் நைட்' வெப் சீரிஸ் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

இந்நிலையில் மிஸ்.மார்வெல் கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'மிஸ்.மார்வெல்' மினி சீரிஸின் முதல் அத்தியாயம் நேற்று (08.06.2022) வெளியானது. இந்த முதல் அத்தியாயத்தின் டைட்டில் பாடலில் ரஜினிகாந்தின் 'லிங்கா' பட பாடல் சில நொடிகள் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 'லிங்கா' படத்தின் முதல் பாடலான 'ஓ...நண்பா' பாடலை இந்த சீரிஸில் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக இந்த சீரிஸின் எண்ட் கார்டில் 'ஏ.ஆர் ரஹ்மான், வைரமுத்து மற்றும் எஸ்.பி.பி இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளனர் 'மிஸ்.மார்வெல்' படக்குழு.

Advertisment

'மார்வெல் ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் அடுத்ததாக 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.