Advertisment

விஜய் சேதுபதி படத்தின் இந்தி ரீமேக்கில் இணைந்த ரஜினி பட நடிகை

Rajini's co-star joins the Hindi remake of Vijay Sethupathi movie

2017ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. 'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் சார்பாக சசிகாந்த் தயாரித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். தமிழில் ஹிட்டான இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சயிஃப் அலிகானும் நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிந்தியிலும் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்குகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்து வருவதாக கூறப்பட்டது. இத்தகவலை சமீபத்திய பேட்டியின் மூலம் நடிகை ராதிகா ஆப்தே உறுதி செய்துள்ளார். தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்து வருகிறார். 2016-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor rajini kandh actor vijay sethupathi radhika apte
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe