Advertisment

மகளுடன் ‘அண்ணாத்த’ லுக்கில் ரஜினி!

annatha

தர்பார் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

Advertisment

இப்படத்தின் ஷூட்டிங் இந்தவருட தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, வருட இறுதியில் அனைத்து பணிகளும் முடிந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதை முன்னிட்டே விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் தடைப்பட்டது.

Advertisment

மீண்டும் சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டும் அண்ணாத்த படக்குழு பொறுமை காத்துவந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து படப்பிடிப்பைத் தொடங்கியது. நேற்று ரஜினி மற்றும் நயன்தாரா பிரைவேட் ஜெட்டில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பில் ரஜினி அண்ணாத்த லுக்கில் படக்குழுவில் மாஸ்க் அணிந்தவாறு தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

rajnikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe