திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து அக்டிவாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இப்பொது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ‘கூலி’ படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. முதல் நாண்கு நாட்களில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து குறுகிய நாட்களில் ரூ.400 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இப்போது வசூல் ரூ.500 நெருங்கவுள்ளது. 

Advertisment

இதனிடையே இப்படம் தொடர்பாக ஒரு போஸ்டர் வெளியாகியிருந்தது. அதாவது மலேசியாவில் படம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடப்பதாகவும் அதன் மூலம் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளதாக தெரிந்ததால், எப்படியாவது இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடகூடாதென மலேசிய ரஜினி ரசிகர்கள், ஆர்வமாக இருந்து வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சி போலியானது என தெரியவந்துள்ளது.  

ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹ்மது, அந்த நிகழ்ச்சி குறித்த ஏற்பாடுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவர் தெரிவித்திருபப்தாகவது, “மலேசியாவில் விளம்பரப்படுத்தி வரும் ரஜினி தொடர்பான நிகழ்ச்சி, முற்றிலும் போலியானது. ரஜினியிடம் இருந்து எந்த அனுமதியும் இந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படவில்லை. ரசிகர்களும் பொதுமக்களும் இந்த தவறான செய்தியை நம்ப வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.