Advertisment

உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

Rajinikanth's meets Uddhav Thackeray

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று 17 ஆம் தேதி முதல் தொடங்கிதிருவண்ணாமலையில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டு இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் அவரது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம்தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் மும்பை சென்றுள்ள ரஜினி, நேற்று வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். பின்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குல்தீப் யாதவ் உள்ளிட்ட சிலவீரர்கள் ரஜினியை சந்தித்து பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேவை ரஜினி சந்தித்துள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ரஜினியை உத்தவ் தாக்கரேவும் அவரது குடும்பத்தினரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துவருகிறது.

Actor Rajinikanth Uddhav Thackeray
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe