தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெவித்துள்ளார்.
அந்த பதிவில் “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்'ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்; மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என்றிருக்கிறார்.
அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.#HBDSuperstarRajinikanth
— M.K.Stalin (@mkstalin) December 12, 2023