Advertisment

"மை காட்! பிரமிக்க வைக்கிறது" - வியப்படைந்த ரஜினிகாந்த்

rajinikantha wishes ar rahman movie

Advertisment

இந்தியத் திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 169 படங்களில் நடித்துள்ள ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று (12.12.2022) கொண்டாடி வருகிறார். திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் இயக்கிய 'லீ மஸ்க்' படத்தைப் பார்த்து ரஜினி பாராட்டியதாகக்குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் ரஜினி பாராட்டுக்கு நன்றியும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கையில், படத்தைப் பார்த்து முடித்தவுடன் "மை காட்!பிரமிக்கவைக்கிறது. சூப்பர்" என ரஜினிகாந்த்பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துவருகிறது.

மேலும் ரஜினி பிறந்தநாளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம். சூப்பர் மனிதர் ரஜினிகாந்த்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த அற்புத கலைஞனின் பெயரைக் காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை. நீடூழி வாழ்க தலைவா" என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Rajinikanth ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe