Advertisment

மீண்டும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் - ரீ ரிலீசுக்கு தயாரான ரஜினி

rajinikantha finishing his dubbing for baba re release

ரஜினிகாந்த்கதை, திரைக்கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினியே தயாரித்தும் இருந்தார். மனிஷா கொய்ராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 'பாபா' படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீசாகவுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இப்படத்தில் புதிதாக சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து புதிதாக இணைக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு தற்போது ரஜினி டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Baba suresh krishna Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe