Advertisment

மறைந்த நடிகரின் மகன் திருமணம் - ரஜினி, கே.ஜி.எஃப் யஷ் பங்கேற்பு

Rajinikanth, Yash attend Abishek Ambareesh and Aviva Bidappa grand wedding

நடிகர் மற்றும் அரசியல்வாதியாக வலம் வந்த மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் மற்றும் தற்போது மண்டியா தொகுதி எம்.பி.யான சுமலதா ஆகியோரின் ஒரே மகன் அபிஷேக். இவர் அவிவா பிடப்பா எனும் மாடல் மற்றும் தொழிலதிபரை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெங்களூரில் இருக்கும் பேலஸ் கிரவுண்ட்ஸில் பிரம்மாண்டமாக நடந்தது.

Advertisment

இந்நிகழ்வில் வெங்கையா நாயுடு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்அனில் கும்ப்ளே, ராதிகா, நதியா, சுஹாசினி மணிரத்னம், தெலுங்கு நடிகர் மோகன் பாபுஉள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் நேரில் கலந்துகொண்டு புதுமணத்தம்பதியை வாழ்த்தினார்.

Advertisment

அதோடு கே.ஜி.எஃப் பட புகழ் யஷ்ஷும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Rajinikanth yash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe