Rajinikanth wishes Tamil New Year to the fans who gathered in front of his house

தமிழர்கள், சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் புத்தாண்டிற்கு தங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் மற்றும் பண்டிகை தினங்களில் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகள் கூறுவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் தமிழ் புத்தாண்டான இன்று, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு அவரது ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூற திரண்டிருந்தனர். வீட்டிற்கு வெளியில் வந்த ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். பலரும் ரஜினிகாந்துக்கு கை கொடுத்தும், சால்வைகள் வழங்கியும்புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் தாமரைப் பூவை ரஜினி கையில் கொடுத்து வாழ்த்துகள் கூறினார். ரஜினிகாந்த் அதனை கையில் வாங்கிக்கொண்டு கையசைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment