Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படத்தை பார்த்த ரஜினி

rajinikanth watched arrahman movie

Advertisment

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே 2020 ஆம் ஆண்டு வெளியான 'அட்கான் சட்கான்' என்ற இந்தி படத்தைத் தயாரித்த ரஹ்மான், பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான '99 சாங்ஸ்' என்ற படத்தைத் தயாரித்து கதையும் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ முறையில் உருவாக்கப்பட்ட ‘லீ மஸ்க்’ (குறும்படம்) படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மாதவன் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். அண்மையில் தானும் நயன்தாராவும் படம் பார்த்து வியந்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'லீ மஸ்க்' படத்தை ரஜினிகாந்த்பார்த்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த்,திரைப்படங்களைப் பார்த்து அவருக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'லீ மஸ்க்' படத்தைப் பார்த்துள்ள ரஜினிகாந்த்விரைவில் அவரது கருத்தை பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தனது சமூக வலைதள பக்கத்தில், ரஜினிகாந்தும் ஏ.ஆர்.ரஹ்மானும் நேரில் சந்தித்துள்ளதாகத்தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு காரணம் தான் என நெகிழ்ச்சியுடன் சொல்லியுள்ள அவர் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள 'லால் சலாம்' படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe