Advertisment

கங்குவாவுடன் போட்டி போடும் வேட்டையன்

rajinikanth vettaiyan release date update

Advertisment

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்தின் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே முடிந்த நிலையில் மற்ற நடிகர் நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு (12.12.2023) வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ அவரது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் தொடங்கினர். இதையடுத்து ஃபகத் பாசில் பிறந்த நாளான கடந்த 8ஆம் தேதி ரஜினிகாந்த, அமிதாப் பச்சன் ஆகியோருடன் ஃபகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்தது.

இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டருன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வெளியாகும் அதே தேதியான அக்டோபர் 10-ல் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Actor Rajinikanth TJ Gnanavel Vettaiyan
இதையும் படியுங்கள்
Subscribe