சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகளை மிகப் பிரமாண்டமாக தமிழக அரசு நடத்துகிறது. இதனிடையே நேற்று (28.07.2022) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவை இந்தியப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இப்போட்டியின் முதல் சுற்று இன்று (29.07.2022) சென்னை மாமல்லபுரத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது.
இதனிடையே ரஜினிகாந்த், நேற்று நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்குக் காவல் துறையினரின் பாதுகாப்போடு சென்றார். இந்நிலையில் தன்னை பாதுகாப்பாக அழைத்துச்சென்ற நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்களை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.