Advertisment

ஹிட்டாக என்ன காரணம்; இணையத்தில் 'விஸ்வாசம்' பற்றி பகிர்ந்த கொண்ட ரஜினிகாந்த்

rajinikanth talk about viswasam movie

Advertisment

இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'விஸ்வாசம்' படத்தை பற்றியும், இயக்குநர் சிவா குறித்தும்தனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட குரல் பதிவில், "அனைவருக்கும் வணக்கம். பேட்ட படம் முடிந்த பிறகு நான் பார்த்தேன். அதில் ரொம்ப ஸ்டைலா கட்டியிருந்தார்கள். பேட்ட வெளியான அன்றுதான்இயக்குநர் சிவா இயக்கியிருந்த விஸ்வாசம் படமும்வெளியாகியிருந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="61c9e8e8-80af-4047-808b-35a946e5f077" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_3.jpg" />

Advertisment

இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். இரண்டுபடத்துக்கும் நல்ல வரவேற்பு. சரி 'விஸ்வாசம்' படத்தை பார்க்கலாம்என்று சொல்லி பார்த்தேன். படம் நல்லா இருந்தது.இன்டர்வல் வந்தது. அப்போ இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் ஆக என்ன காரணம் என்று யோசனை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாம் பாதி பார்த்தேன். க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி க்ளைமாக்ஸ்எக்ஸ்சலெண்டா இருந்தது. சூப்பர் படம். என்னை அறியாமல் கை தட்டினேன். தயாரிப்பாளர் தியாகுவிடம் இயக்குநர் சிவாவை பார்த்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பின் சிவா வீட்டுக்கு வந்தார். கள்ளங்கபடம் இல்லாத ஒரு குழந்தை மாதிரி உண்மையாக பேசினார். சிவாவைஎனக்கு பிடித்திருந்தது " எனத்தெரிவித்துள்ளார்.

siruthai siva ACTORS RAJINIKANTH viswasam petta
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe