Skip to main content

ஹிட்டாக என்ன காரணம்; இணையத்தில் 'விஸ்வாசம்' பற்றி பகிர்ந்த கொண்ட ரஜினிகாந்த்

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

rajinikanth talk about viswasam movie

 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'விஸ்வாசம்' படத்தை பற்றியும், இயக்குநர் சிவா குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட குரல் பதிவில், " அனைவருக்கும் வணக்கம். பேட்ட படம் முடிந்த பிறகு  நான் பார்த்தேன். அதில் ரொம்ப ஸ்டைலா கட்டியிருந்தார்கள். பேட்ட வெளியான அன்றுதான் இயக்குநர் சிவா இயக்கியிருந்த விஸ்வாசம் படமும் வெளியாகியிருந்தது. 

 

ad

 

இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். இரண்டு படத்துக்கும் நல்ல வரவேற்பு. சரி 'விஸ்வாசம்' படத்தை பார்க்கலாம் என்று  சொல்லி பார்த்தேன். படம் நல்லா இருந்தது. இன்டர்வல் வந்தது. அப்போ இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் ஆக என்ன காரணம் என்று யோசனை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாம் பாதி பார்த்தேன்.  க்ளைமாக்ஸ்    நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி  க்ளைமாக்ஸ்   எக்ஸ்சலெண்டா இருந்தது. சூப்பர் படம். என்னை அறியாமல் கை தட்டினேன். தயாரிப்பாளர் தியாகுவிடம் இயக்குநர் சிவாவை பார்த்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பின் சிவா வீட்டுக்கு வந்தார். கள்ளங்கபடம் இல்லாத ஒரு குழந்தை மாதிரி உண்மையாக பேசினார். சிவாவை எனக்கு பிடித்திருந்தது " எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஃபயர்’ - சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா அப்டேட்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
kanguva first single updat

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி ‘ஃபயர்’ (FIRE SONG) என்ற பாடல் வெளியாகவுள்ளது. அன்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஒரே ஒரு வசனம் - ஆக்ரோஷமாக கத்தும் சூர்யா

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
suriya kanguva teaser released

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று பின்பு சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சற்று தாமதமாக வெளியானது. டீசரில், பீரியட் ட்ராமா ஜானருக்கே உரித்தான கப்பல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் சூர்யாவிற்கும் பாபி தியோலுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமெனத் தெரிகிறது. இரு தரப்பிற்கும் நடக்கும் மோதலே படக்கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம் வருகிறது. அதுவும் சூர்யா ஆக்ரோஷமாக ‘பெருமாச்சி..’ எனக் கத்தும் காட்சியாக இருக்கிறது. பட வெளியீடு குறித்து டீசரில் சொல்லவில்லை. விரைவில் அது குறித்த அப்டேட் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.