Advertisment

“ரசிகர்களுக்காக மணிரத்னம் என்னை மறுத்துவிட்டார்” - ரஜினிகாந்த்

rajinikanth talk about ponniyin selvan movie

Advertisment

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர்மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "பொன்னியின் செல்வன் படத்தில் நான் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மணிரத்னத்திடம் கேட்டேன். ஆனால் அவர் முடியவே முடியாது என்று கூறிவிட்டார். உங்களை இந்தக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் உங்கள் ரசிகர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் என்றார். பொன்னியின் செல்வன் படத்தில் தேடி தேடி கதைக்குஏற்ற நாயகர்களை மணிரத்னம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். நந்தினியின் கதாபாத்திரம் தான் பொன்னியின் செல்வனின் கதை; அதை பொன்னியின் செல்வி என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். அப்படிப்பட்ட நந்தினியின் இன்ஸ்பிரேஷன் தான் படையப்பா படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம்" என்றார்

maniratnam ACTOR RAJINI KANTH ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe