சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'காப்பான்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நாயகி சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் ரஜினி பேசியபோது....

Advertisment

rajini

''சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்து இருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள். சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. ‘ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்’ என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்'' என்றார்.