vdsgdsgsds

Advertisment

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரஜினிக்கும் ரத்த அழுத்த பிரச்சினைகளால் உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்பு அவரது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்துவந்தார். இதையடுத்து, மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டப்பிங் பணிகளையும் ரஜினி விரைவில் முடித்துவிடுவார் என கூறப்படும் நிலையில், ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த 19ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டார். மேலும், அவருக்குப் பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகள் முடிந்து அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மறைத்தவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. ரஜினி அமெரிக்காவில் மூன்று வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.