/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_75.jpg)
'அண்ணாத்த' படத்தைத்தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் ரஜினி நடிக்கும்அடுத்தடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.லைகா நிறுவனத்துடன் இணைந்துஅடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு படம் 'டான்' படத்தைஇயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பூஜை அடுத்த மாதம் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் லைகா நிறுவனத்துடனான இரண்டாவது படத்தை மணிரத்னம் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லைகா தயாரிப்பில் '2.0', மற்றும் 'தர்பார்' படத்தில்ரஜினி நடித்திருந்தார். இரண்டு படங்களுக்கும் பெரியளவில் ஓப்பனிங் இருந்ததுகுறிப்பிடத்தக்கது. அதே போல் இவர்கள் கூட்டணியில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)