நடிகர்கள் அமீர் கான், கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். இந்நிலையில் அமிதாப் பச்சன் சில மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து இரவில் தூக்கமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் உடல் சோர்வு ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் ஜெய்ப்பூருக்கு விரைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை. இந்நிலையில் ஆன்மீக பயணமாக இமயமலை மற்றும் வட இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் உடல் நல குறைவு செய்தியை அறிந்தார். பின்னர் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார்.
அமிதாப்பச்சனுக்காக பிரார்த்திக்கும் ரஜினிகாந்த்!
Advertisment