/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RAJINI_1.jpg)
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்ப்ராங்க்ளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார்.திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளைபேசியுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரைட்டர் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு, படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Follow Us