Advertisment

"ஜனவரியில் ரஜினி சாரிடம் இருந்து வந்த ஃபோன் கால்" - சீனு ராமசாமி நெகிழ்ச்சி

Rajinikanth praises vijay sethupathi Mamanithan movie

'கூடல் நகர்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சீனுராமசாமி. 'கண்ணே கலைமானே' படத்திற்கு பிறகு இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மாமனிதன்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்டூடியோ 9 சார்பாக ஆர்.கே சுரேஷ் படத்தை வெளியிடுகிறார்.

Advertisment

மாமனிதன் படத்தை ரஜினிகாந்த் ஜனவரியில் பார்த்துவிட்டு படக்குழுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிருக்கிறார். அவருக்கு நன்றி கூறும் விதமாக சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.

Advertisment

Actor Rajinikanth actor vijay sethupathi maamanithan seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe