Advertisment

"என்னுடைய கண்ணீரை தடுக்க முடியவில்லை" - நடிகர் ரஜினிகாந்த்

rajinikanth praises sivakarthikeyan and Don team

Advertisment

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் தொடர்பு கொண்டு "சூப்பர் பா,படம் நன்றாக இருந்தது. கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priyanka mohan actor sivakarthikeyan Don Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe